மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு‼️

மொனராகலை, புத்தல   கடுகஹகல்கே வாவியில் நீராடச் சென்ற மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (14) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயர் தரத்தில் கல்வி பயிலும் மூன்று மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த மூவரின் சடலங்களும் இன்று (15) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.