காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து கல்லுண்டாய் வீதியில் குடைசாய்ந்ததில் பலர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இங்கு வீதி புனரமைப்பு பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில் வேகமாக வந்த பேருந்து மழை காரணமாக சறுக்கி விபத்துக்குள்ளாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.