இலங்கை கொரோனா வைரஸ் பரவலில் மிக மோசமான மற்றும் உயர்ந்த நிலையை எட்டியுள்ளது என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வைத்தியர் நளிந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.

மிகமோசமான நிலை என்பது உயிரிழப்புகளில் மாத்திரமில்லை கொரோனாவால் பாதிக்கப்படும் சுகாதார அதிகாரிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனைகளால் கிசிச்சை வழங்ககூடிய அளவை கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை கடந்துவிட்டது பெருந்தொற்று காரணமாக மருத்துவமனைகள் தீவிரகிசிச்சை பிரிவுகளில் நோயாளர்கள் நிரம்பியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவ பணியாளார்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதால் மனிதவளங்களை பெற்றுக்கொள்வதில் நாங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.