மத்திய மாகாணத்தில் இன்று(12) காலை பெய்த கடும் மழை காரணமாக நாவலப்பிட்டி நகரத்தின் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதன் காரணமாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.

நாவலப்பிட்டி நகர பேருந்து நிலையத்தில் இருந்து கம்பளை நோக்கி 300 மீட்டர் மற்றும் நாவலப்பிட்டி மருத்துவமனை வீதி மழையால் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அத்துடன் பிரதான வீதிக்கு அருகிலுள்ள பல கடைகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.