தலிபான்களின்  அதிரடி அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் மக்களுக்கு பொது மன்னிப்பு வழங்குகிறோம், அனைத்து அரசு ஊழியர்களும் பணிக்குத் திரும்ப வேண்டும் என, தலிபான்கள் அறிவித்துள்ளனர்.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை, தலிபான் பயங்கரவாத அமைப்பு கைப்பற்றி உள்ளது. இந்நிலையில், தலிபான்கள் சார்பில் அதன் செய்தித் தொடர்பாளர் ஜபீஹுல்லா முஜாஹித் கூறியுள்ளதாவது,

ஆப்கனில் அரசு ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படுகிறது. அவர்கள் வழக்கமான வாழ்க்கையை நம்பிக்கையுடன் நடத்தலாம். அரசு ஊழியர்கள் தங்கள் பணிக்கு திரும்ப வேண்டும்.

மக்களின் உயிரும், சொத்துக்களும் பாதுகாப்பாக இருக்கும். யாரையும் பழிவாங்க மாட்டோம். நாங்கள் மக்களின் சேவகர்கள். இஸ்லாமிய சட்டங்களுக்கு உட்பட்டு பெண்களின் உரிமைகள் மதிக்கப்படும் என உறுதியளிக்கிறோம் என்று கூறியுள்ளார்.