சமையல் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு நீங்கும் வகையில், ஒரு இலட்சம் வீட்டு பாவனைக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களை நாளாந்தம் சந்தைகளுக்கு விநியோகிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார்.சந்தைகளுக்கு எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும் நடவடிக்கை நேற்று (10) முதல் ஆரம்பிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு நிலவுவதாக அச்சமடைய வேண்டாம் என பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ள அதேநேரம், நாட்டிற்கு தேவையான சமையல் எரிவாயு தமது நிறுவனத்திடம் உள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.