இலங்கை ரூபாவின் மதிப்பை குறைப்பதற்கு உரிமம் பெற்ற வங்கிகள் கோரியுள்ளதாக வெளியான தகவலில் உண்மையில்லை என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செலாவணி வீதத்தினை நிர்ணயிப்பதன் மீதான நிலை அல்லது தொழிற்பாட்டு ரீதியான ஏற்பாடுகளுக்கு இலங்கை மத்திய வங்கி எந்தவொரு மாற்றத்தினையும் மேற்கொள்ளவில்லை.
சமூக வலைத்தளங்கள் ஊடாக பரவும் குறித்த தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை.
எனவே அது தொடர்பில் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.