கொவிட் தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கையாக கொழும்பு நகரத்தின் அனைத்து வர்த்தக நிறுவனங்களையும் மூடுமாறு கொழும்பு மாநகர முதல்வர் ரோஸி சேனாநாயக்க இன்று கோரிக்கை விடுத்துள்ளார். நகரத்தில் தொற்று நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த வணிக நிறுவனங்களை மூடுவதன் மூலம் தமக்கு ஆதரவை தருமாறு ரோஸி சேனாநாயக்க அறிக்கை ஒன்றின் மூலம் கேட்டுள்ளார்.