எல்பி எரிவாயுவை தயாரித்து போட்டி விலையில் தொடங்கவென இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து ஒரு புதிய நிறுவனத்தை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 

அண்மைய அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து முடிவு செய்யப்பட்டது. 

நாட்டின் எல்பி எரிவாயு தேவையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சுமார் 5 வீதத்தை உற்பத்தி செய்வதுடன் லிட்ரோ, லாஃப் எரிவாயு நிறுவனங்களுக்கு சமமாக பொருட்களை வழங்கி வருகிறது. 

இதேவேளை எரிசக்தி அமைச்சு சப்புகஸ்கந்த பகுதியில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப் பதற்கான ஆரம்பப் பணிகளைத் தொடங்கியுள்ளது.