உலகிலேயே மிகப்பழையதும்,அதியுயரமுமான அசையும் கட்டுமானப்பொருளாக நல்லூர் கந்தசுவாமி ஆலய சப்பறம் விளங்குகிறது.

இச்சப்பறம் 250 வருடங்களுக்கு மேல் பழைமையானதாகும். இச்சப்பறம் உருவான கதை வியப்பானதாகும்.


முன்னொரு காலம் நல்லை கந்தனுக்கு சப்பறம் உருவாக்க எண்ணிய போது சிவலிங்கசெட்டியார் என்பவர் இந்த சின்ன வேல்பெருமானுக்கு பெரிய சப்பறம் தேவையா என வினாவினார். அன்று அவரது கனவில் வேல்பெருமான் விஸ்வரூபம் எடுத்து தனது ழுழுத் தோற்றத்தை அவருக்கு காண்பித்தார். இதன் மூலமே நல்லூர் கந்தசுவாமி ஆலய சப்பறமானது முருகப்பெருமானுடைய அருளுடன் மிகப்பிரமாண்டமாக அமைந்தது.

இன்று வேல்பெருமானுடைய ழுழுத் தோற்றத்தையும் சப்பறத்தின் மேல் பகுதியில் உள்ள கண்ணாடியில் காணமுடிகிறது.

நல்லூரானின் சப்பறம் இலங்கையில் 1வது அதி உயரமான அசையும் கட்டுமானப்பொருளாகும். உலகில் 2 வது அதிஉயரமான கட்டுமானப்பொருளாகும்.