ஜனாதிபதிக்கும் - ரணிலுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எம்.பியுமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், இன்று செவ்வாய்க்கிழமை சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இலங்கையில் தற்போது காணப்படுகின்ற கொரோனா நிலைமைகள் தொடர்பில் இருவரும் தொலைபேசியில் உரையாடிக்கொண்டனர்.
அதனடிப்படையிலேயே குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
ஐ.தே.கட்சியின் உப-தலைவர் அகில விராஜ் காரியவசத்தின் தந்தை மரணமடைந்துள்ளார்.
அதன் காரணமாக, அவரது இறுதி கிரியையில் பங்கேற்பதற்காக, ரணில் விக்கிரமசிங்க கொழும்பிலிருந்து இன்றுக்காலை வெளியேறிவிட்டார்.
இதனையடுத்து, கொழும்புக்குத் திரும்பியவுடன் இந்த சந்திப்பு இடம்பெறும் என ஐ.தே.கவின் தலைமையகமான சிறிகொத்தாவின் வட்டாரங்கள் தெரிவித்தன.