வவுனியாவில் நிர்வாணமாக வரும் மர்ம நபர்கள்! பெண்களை கட்டியணைத்து சில்மிசம்!

வவுனியா மதவுவைத்த குளம் பகுதியில் மர்ம மனிதர்களது நடமாட்டம் கடந்த இரு வாரங்களாக அதிகரித்திருப்பதாக அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

வவுனியா மதவுவைத்தகுளம் பகுதியில் கடந்த இரு வாரங்களாக அடையாளம் தெரியாத வகையில் உடம்பு முழுவதுமாகம் நிறப்பூச்சுக்களை பூசிகொண்டு நிர்வாணமான நிலையில் வரும் மர்ம நபர்கள் பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை இலக்கு வைத்தும், குடும்ப தலைவர் வீட்டில் இல்லாத நேரங்களில் வீடுகளிற்குள் புகுந்து, வீட்டில் தனிமையில் இருக்கும் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முற்படுகின்றனர்.

குறித்த மர்ம மனிதர்களது அட்டூழியங்கள் கடந்த இரு வாரங்களாக அதிகரித்த நிலையில் மதவுவைத்த குளத்தில் வாழும் மக்கள் நிம்மதியாக இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் இக்கிராம மக்கள் வன்னி பிரதி பொலிஸ்மா அதிபரிடம் கடந்த வியாழக்கிழமை (05) முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

மர்மமனிதர்களது நடமாட்டத்தை கட்டுப்படுத்தாமல் விட்டால் குறித்த பகுதி மக்கள் நிம்மதியாக இரவு நேரங்களில் இருக்க முடியாது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.