நாட்டுக்கு மேலும் 15,000 டோஸ் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் ரஷ்யாவினால் வழங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், 15, 000 ஸ்புட்னிக் V தடுப்பூசிகளுடன் விமானம் ஒன்று ரஷ்யாவிலிருந்து இன்று (11) காலை இலங்கையை வந்தடைந்தது.

இலங்கையில் அனுமதி கொடுக்கப்பட்ட தடுப்பசிகளில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பூசியும் ஒன்றாகும்.

இதற்கு முன்னரும் ரஷ்யா இலங்கைக்கு நன்கொடையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.