கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நாட்டின் அனைத்து விதமான கல்வி கற்பிக்கும் நடவடிக்கைகளையும் உடன் அமுலுக்குவரும் வகையில் இடைநிறுத்துமாறு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.மேலும் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் அசேல குணவர்தனவினால் நேற்று (18) வெளியிடப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டியிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு பாலர் பாடசாலைகள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர் கல்வி பீடங்கள், மேலதிக வகுப்புக்களை நடத்துவது மறு அறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை தடை செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா பரவலுக்கு மத்தியில், 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இலங்கையின் கல்வி நடவடிக்கைகள் பாரிய பின்னடைவை சந்தித்து வருகின்ற நிலையிலேயே, புதிய சுகாதார வழிகாட்டியிலும் கல்வி சார் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.