கொவிட் வைரஸ் தொற்றாளர்கள் அதிகம் இனங்காணப்பட்டதையடுத்து இதுவரை 7 ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன என்று ரயில் நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்துருவ, ரத்கம, வில்வத்த, தல்பே, ஹெட்டிமுல்ல, எகொட உயன மற்றும் களுத்துறை வடக்கு ஆகிய ரயில் நிலையங்களே இது வரை மூடப்பட்டுள்ளன. இது வரைக்கும் 102 ரயில் ஊழியர்கள் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.