நடிகர் விஜய் மற்றும் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஆகிய இருவரும் சென்னையில் இன்று சந்தித்த போது எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சென்னையில் தனியார் ஸ்டூடியோ ஒன்றில் விஜயின் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், அதன் அருகிலேயே தோனியின் விளம்பர படப்பிடிப்பும் நடந்திருக்கிறது. அப்போது இருவரும் சந்தித்து பேசியிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.