தனியார் வைத்திய நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு அரசாங்கம் அதிகபட்ச விலையை நிர்ணயித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். அதன்படி, தனியார் துறையினர் பி.சி.ஆர் பரிசோத னைக்கு 6,500 ரூபாவும், விரைவான அன்டிஜன் பரிசோதனைக்காக 2,000 ரூபாவும் அறவிட வேண்டும் என விசேட வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.