இலங்கை மக்கள் பைசர் தடுப்பூசி கனவுகளை நிறைவேற்றுவதற்காக காத்திருக்ககூடாது என கொழும்பு மாநகரசபையின் தொற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் தினுகுருகே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பைசர் தடுப்பூசி கிடைக்கலாம் என்ற எதிர்பார்பில் பலர் வேறு தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளாமல் காத்திருக்கின்றனர்.

இதேவேளை குறிப்பிட்ட ஒரு வகை தடுப்பூசிக்காக காத்திருப்பதற்கு பதில் பொதுமக்களை கிடைக்கின்ற தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நாங்கள் மிகவும் ஆபத்தான பெருந்தொற்றில் சிக்குண்டுள்ளோம்,தங்கள் பைசர் கனவுகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக நீண்டகாலம் உயிர்வாழாத பலரை நான் சந்தித்துள்ளேன் என கொழும்பு மாநகரசபையின் தொற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் தினுகுருகே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிடைக்கின்ற தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுங்கள் ஒருநாள் கூட தாமதிக்கவேண்டாம்,பொதுமக்கள் மரணிப்பதை பார்ப்பது விரக்தியை ஏற்படுத்துகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.