எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஒரு இறாத்தல் பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட உள்ளது. வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன், ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலைகளும் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு கிலோ கேக்கின் விலையும் 100 ரூபாவால் அதிகரிக்கப்பட உள்ளதாக வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.