தனது உயிரையும் பணயம் வைத்து கொரோனா நோயாளிகளை மருத்துவமனைகளில் சேர்க்கும் தென்னிலங்கை நபர் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பின் புறநகர் பகுதியான பாணந்துறை பிரதேசத்தில் கொவிட் தொற்றுக்குள்ளான நோயாளர்களை இலவசமாக தனது ஜீப் வண்டியில் வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்து சென்று ஒருவர் உதவி வருகிறார் என்று தெற்கு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளதுடன், பாராட்டுக்களையும் தெரிவித்துவருகின்றன.

60 வயதுடைய வர்த்தகரான சஹஸ்ரவிஜித்த என்ற நபரே கடந்த 4 நான்கு நாட்களாக இந்த மனிதாபிமான செயலை செய்து வந்துள்ளார்.

காலை இரவு பாராமல் கிடைக்கும் அனைத்து அழைப்புகளுக்கும் 24 மணித்தியாலங்களும் சேவை வழங்கும் நடவடிக்கையை அவர் மேற்கொண்டுள்ளார். அவரது மனைவியான குமாரி விஜிதா அவருக்கு செய்யும் உதவி மிகப்பெரியதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் பரவலின் போது அச்சத்தில் வீடுகளில் முடங்கியிருக்கும் மத்தியில் தனது உயிரை பயணம் வைத்து இந்த நபர் செய்யும் சேவையை சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டியுள்ளனர்.