எந்தளவு கொவிட் தொற்று நோயாளிகளை வைத்தியசாலைகளில் தங்க வைக்க முடியுமென்பது தொடர்பில் முழு விபரங்களுடனான அறிக்கையொன்றை உடனடியாக தமக்குப் பெற்றுத்தருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுகாதாரத்துறை உயரதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

 தொற்று நோயாளிகளுக்கு அதிக வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலேயே இது தொடர்பில் ஜனாதிபதி முழுமையான அறிக்கையை கோரியுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.