பாராளுமன்ற வளாகத்திலுள்ள வங்கிக் கிளைக்கு பூட்டு...

பாராளுமன்ற வளாகத்திலுள்ள இலங்கை வங்கியின் கிளை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அதன்படி ,குறித்த வங்கிக் கிளையில் பணியாற்றிவந்த சிலருக்கு கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டதைத் தொடர்ந்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

குறித்த கிளையின் உதவி முகாமையாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ,இதனையடுத்து பாராளுமன்றத்தில் பணியாற்றுகின்ற மேலும் 06 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.