அமைச்சர்கள் அனைவரும் தங்களது ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொரோனா ஒழிப்பு நிதியத்திற்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ள நிலையில், தனது சம்பளத்தை வழங்கக்கூடிய நிலைமை இல்லையென பாராளுமன்ற உறுப்பினர் எஸ.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி ,கடன் ஒன்று பெற்றமைக்காக தனது சம்பளம் முழுவதும் அதற்கு அறவிடப்படுவதாகவும், தற்போது மனைவியின் சம்பளத்திலேயே தான் வாழ்ந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் ,ஒரு குறிப்பிட்ட தொகையை கொரோனா ஒழிப்பு நிதியத்திற்கு வழங்குவதாகவும், சுமார் 300 இலட்சம் வரை வங்கிக் கடன் செலுத்தவேண்டியுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க குறிப்பிட்டார்.