அரசாங்கம் செய்கின்ற பைத்தியக்காரத்தமான செயலிற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என தேசிய இளைஞர் பேரவையிலிருந்து பதவி விலகி உள்ள இராஜ்வீரரட்ண தெரிவித்துள்ளார்.


நாடு ஊழல்மிகுந்ததாக காணப்படுகின்றது துயரமான நிலையில் உள்ளது இதனை மாற்றுவதற்கு எத்தனை தலைமுறையெடுக்கும் என்பதை கற்பனை செய்து பார்க்க முடியாமல் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

 2019 இல் நாட்டில் காணப்பட்ட நிலைமை காரணமாக நாட்டினால் முன்னோக்கி நகரமுடியாது என்பதால் ஜனாதிபதியாக கோத்தபாயராஜபக்சவை கொண்டுவரவேண்டியது தவிர்க்க முடியாதவிடயமாக காணப்பட்டது அதனை நான் செய்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்காக தற்போதைய அரசாங்கம் செய்கின்ற பைத்தியக்காரத்தனமான விடயங்களிற்கு எல்லாம் என்னை குற்றம்சாட்ட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

நான் மகிந்தராஜபக்சவின் மகனால் தாக்கப்பட்டேன் என்ற 3 வீத குழு பொய்யான தகவல்களை பரப்புகின்றது மக்களை ஏமாற்றி தங்கள் இலக்குகளை அடையவதற்காக அவர்கள் இவ்வாறு செய்கின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.