பைசர் தடுப்பூசியை செலுத்துவதற்கான அதிகாரம் இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

புத்தளம் உட்பட பல பகுதிகளில் பைசர் தடுப்பூசியை வழங்குவதில் ஏற்பட்ட குழப்பநிலையை கருத்தில்கொண்ட பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் பைசர் தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கைகளை இராணுவமே முன்னெடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

வழமையான நடைமுறைகளின் பைசரை பெறுவதற்கு தகுதியற்ற தனிநபருக்கு அதனை வழங்கப்போவதில்லை என இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.