கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான தீர்வாக அரசாங்கம் நாட்டை முடக்காதிருப்பது ஏன் என வர்த்தக அமைச்சரான பந்துல குணவர்தனவிடம் ஊடகவியலாளர்கள் இன்று (18) கேள்வியெழுப்பினர்.

புறக்கோட்டையில் இன்று (18) முற்பகல் வர்த்தக நடவடிக்கைகளை கண்காணித்த போதே அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் வினவப்பட்டது.

நாட்டை முடக்குவதென்பது ஜனாதிபதி ஒரு நாளில் சில நிமிடங்களுக்குள் எடுக்கக்கூடிய தீர்மானம் என அமைச்சர் பந்துல குணவர்தன இதன்போது கூறினார்.

ஆனால், கொரோனாவால் பாதிக்கப்படாத மக்களை எப்படி வாழ வைப்பது என்று ஒரு அரசாங்கமாக தாம் சிந்திக்க வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

நாடு முடக்கப்பட்டால் பருப்பு, கடலை, கிழங்கு மற்றும் வெங்காயம் போன்றவற்றை தொடர்ச்சியாக இறக்குமதி செய்வதில் இடையூறு ஏற்படும் எனவும் இதனால் நாட்டில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்