இலங்கைக்கு ஒட்சிசனைக் கொண்டு வருவதற்காக, கடற்படைக்கு சொந்தமான கப்பலொன்று கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்தியாவிற்கு பயணமானது.

சென்னை துறைகத்தில் ஒட்சிசன் அடங்கிய கொள்கலன்கள் ஏற்றும் பணிகள் நேற்றிரவு ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, பாரியளவான இரண்டு கொள்கலன்களின் மூலம் இலங்கைக்கு ஒட்சிசன் கொண்டுவரப்படவுள்ளது.

பெரும்பாலும் இன்றைய தினம் (20) குறித்த கப்பல் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது.

மாதாந்தம் 1 இலட்சத்து 20 ஆயிரம் லீற்றர் திரவ மருத்துவ ஒட்சிசனைக் கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்த, அமைச்சரவை முன்னதாக அனுமதி வழங்கியிருந்தது.

இந்நிலையில், மேலும் 3 இலட்சத்து 60 ஆயிரம் லீற்றர் திரவ மருத்துவ ஒட்சிசனை இறக்குமதி செய்ய இந்த வாரம் அமைச்சரவையின் அனுமதி கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.