தற்போதைய சூழ்நிலையில் நாட்டை முடுமையாக முடக்குவதற்கு எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை

என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், எதிர்காலத்தில சில முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என்றும், தற்போதுள்ள பயணக் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.