2000 ரூபாவிற்கு சினோபார்ம் தடுப்பூசியை  விற்பனை செய்த வைத்தியசாலை சிற்றூழியர் கைது செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவ லுனாவ வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் சிற்றூழியர் ஒருவரே இவ்வாறு தடுப்பூசி விற்பனை செய்துள்ளார். 

சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட சினோபார்ம் தடுப்பூசிகளை சட்டவிரோதமான முறையில் குறித்த சிற்றூழியர் விற்பனை செய்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சுகாதார அமைச்சின் கணக்காய்வு பிரிவிற்கு கிடைக்கப் பெற்ற தரவுகளுக்கு அமைய குறித்த சிற்றூழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.