கள்ளக்குறிச்சி அருகே 13 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள விருகாவூர் கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவரின் மகன் சத்தியமூர்த்தி (28). இவருக்கு திருமணமாகி 9 வருடம் ஆன நிலையில், 8 வயதில் ஒரு மகனும் 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் சத்தியமூர்த்தியின் நடவடிக்கை சரியில்லாததால் தனது பிள்ளைகளை அழைத்துக்கொண்டு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அவரது மனைவி தாய் வீட்டிற்குச் சென்று விட்டார்.

இந்நிலையில், இரவில் தனியாகச் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது பள்ளி மாணவியை சத்தியமூர்த்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி, போக்சோ சட்டத்தின்கீழ் சத்தியமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.