மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நேற்று (13) நள்ளிரவு முதல் கடுமையாக அமுல்படுத்தப்பட்ட போதிலும், மக்கள் கால் நடையாக மாகாண எல்லைகளை கடந்து வருவதாக சகோதர ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களின் எல்லையான கேகாலை − பொல்கஹவெல வீதியின் கரந்தன பாலத்தின் ஊடாக மக்கள் மாகாண எல்லையை கடந்து வருவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமேல் மாகாணத்திலிருந்து பஸ்களில் வருகைத் தரும் பயணிகள், குறித்த பாலத்தில் இறங்கி, கால் நடையாக பாலத்தை கடந்து,  ஒரு புறத்திலுள்ள சப்ரகமுவ எல்லைக்குள் பிரவேசிக்கின்றனர்.

சப்ரகமுவ எல்லையிலுள்ள பஸ்களில் பின்னர் ஏறி, மாகாணத்திற்கு பிரவேசிப்பதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பாலத்தை கடக்கும் வாகனங்களை பொலிஸார் சோதனைக்கு உட்படுத்துகின்ற போதிலும் , கால் நடையாக பாலத்தை கடக்கும் பயணிகளை சோதனைக்கு உட்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.