கடந்த ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 9ம் திகதி வரையான காலப் பகுதியில் கம்பஹா மாவட்டம் அதிவுயர் அச்சுறுத்தல் மிக்க மாவட்டமாக மாறியுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.இதன்படி, குறித்த காலப் பகுதியில் கம்பஹா மாவட்டத்தில் 12,555 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

இத்துடன் , 7,003 பேர் தமது வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட கொவிட் தடுப்பு குழுக் கூட்டத்தில் நேற்று கருத்துக்கள் வெளியாகியிருந்தன.

அவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள 12,555 பேரில் 4,046 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அதேவேளை, 2020ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையான காலப் பகுதியில் கம்பஹா மாவட்டத்திற்குள் கொவிட் தொற்றுக்கு உள்ளான 1,033 பேர் உயிரிழந்துள்ளனர்.