வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் கோணலிங்கம் கருணானந்தராசா (வயது-76) கொவிட்-19 நோயினால் இன்று (11) முற்பகல் உயிரிழந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவருக்கு பொதுச் சுகாதார பரிசோதகரினால் நேற்றுமுன்தினம் முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு Antigen பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து மந்திகை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் அவர் இன்று முற்பகல் உயிரிழந்துள்ளார்.

அரசியலிலும் சரி பொது வாழ்விலும் சரி நேர்மையும் தற்துணிவும் கொண்டவர் ஜயா அவர்கள். அன்னாருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதுடன் அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.