எதிர்வரும் இரண்டு வாரங்களில் என்ன செய்தாலும், கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரணங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சுகாதார பிரிவினருக்கு தாங்க முடியாத அளவில் தொற்றாளர்கள் இனங்காணப்படுவதை உடனடியாக கட்டுப்படுத்தப்பட வேண்டும் என குறித்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார். 

தொற்றாளர்கள் அதிகரிப்பை கட்டுப்படுத்தவில்லை என்றால் பாரிய அளவினை சந்திக்க வேண்டி ஏற்படும் எனவும் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் பல உயிர்கள் பரிபோகலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.