சீன அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு இடையே 61.5 பில்லியன் ரூபா பெறுமதியான கடன் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள சீன தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய, கொரோனா ஒழிப்பு, நிதி ஸ்திரத்தன்மை, வாழ்வாதார அபிவிருத்தி என்பனவற்றுக்காக குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

10 வருட கால சலுகை அடிப்படையில் இந்த கடன் தொகை இலங்கைக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.