60 மருந்துப்பொருட்களுக்கான ஆகக்கூடிய சில்லறை விலையை நிர்ணயித்து சுகாதார அமைச்சினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், அரச வைத்தியசாலைகளில் மருந்தக கூட்டுதாபனத்தினால் விநியோகிக்கப்படும் 169 அத்தியாவசிய மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக முன்னாள் சுகாதார அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனராத்ன தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விடயம் குறித்து 2 தேசிய நாளிதழ்களில் கடந்த 19ஆம் திகதி அறிக்கையிடப்பட்டிருந்த போதிலும் அதனை அறிக்கையிட்ட ஊடகவியலாளர் காரணங்களை ஆராயாமல் 40 வகையான மருந்துகளின் பட்டியலை வெளியிட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தமது கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட விடயத்தினை ஆராயாமல் மீண்டும் வெளியிடுவது எதிர்கட்சி தலைவர் பதவி வகிக்கும் ஒருவருக்கு பொறுத்தமானதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகாரசபை சட்டத்திற்கு அமைய மருந்து வகைகள் மற்றும் வைத்திய உபகரணங்கள் பலவற்றிற்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சுகாதார அமைச்சினால் நேற்று வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானிக்கு அமைய 60 வகையான மருந்துகள் மற்றும் நான்கு வகையான வைத்திய உபகரணங்கள் என்பனவற்றுக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.