அமெரிக்கா ஆப்கானில் இருந்து அவசரமாக வெளியேறி வரும் நிலையில். அமெரிக்காவின் போர் விமானங்களில் ஒன்றான, பிளாக்- ஹவாக் என்னும் ஹெலியை தலிபான்கள் சற்றும் எதிர்பாராமல் கைப்பற்றியுள்ளார்கள். 

இது போக ரஷ்ய தயாரிப்பான 2 சிறிய ரக விமானத்தையும் தலிபான்கள் கைப்பறியுள்ள நிலையில். எஞ்சியுள்ள அமெரிக்க நிலைகள் மீது வீமான தாக்குதல் நடக்கக் கூடும் என்ற பெரும் அச்சம் எழுந்துள்ளது. இதனால் விமான எதிர்ப்பு பீரங்கிகளை அமெரிக்கா காபூல் நோக்கி நகர்த்தியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் சற்று முன்னர் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க படைகள் காபூலில் இருந்து வெளியேற முன்னர். அவர்களில் பலரை தாக்கி ஒரு பெரும் ரத்தக் களரியை ஏற்படுத்த தலிபான்கள் பெரும் திட்டம் தீட்டி உள்ளார்கள். அதில் ஒன்று தான் இந்த கைப்பற்றல் நடவடிக்கை

அமெரிக்க படைகள் துரிதமாக வெளியேறி வருகிறது. சுமார் 6 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான இந்த பிளாக் ஹவாக் ஹெலி பெரும் தாக்குதல் நடத்த வல்லவை. இது எப்படி தலிபான்கள் கைகளில் சிக்கியது என்பதனை அமெரிக்கா இதுவரை தெரிவிக்கவில்லை. 

இருப்பினும் அமெரிக்காவின் ஒரு சிறிய தளத்தை, தலிபான்கள் அதிரடியாக தாக்கி கைப்பற்றியுள்ளதாக தலிபான்கள் செய்தி வெளியிட்டுள்ளார்கள்.