இலங்கையில் டெல்ட்டா தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் முக்கியமானதென ஸ்ரீ ஜயவர்த்தனபுர, நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத்துறை இயக்குனர் மருத்துவர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

அதன்படி ,இலங்கையில் டெல்டா தொற்று தற்போதுதான் ஆரம்பமாகி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் கொடூர தன்மை எதிர்வரும் நாட்களில் எதிர்பார்க்கலாம்.

விசேடமாக எதிர்வரும் இரண்டு வாரங்கள் தீர்மானமிக்கது. வூஹான் மாறுபாட்டை விடவும் இரண்டு மடங்கு இது பரவும். 5 வினாடிகளேனும் முகக்கவசத்தை அகற்றினால் அந்த காலப்பகுதியில் வைரஸ் தொற்றிக்கொள்ளும் ஆபத்து உள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் இந்த பரவலை தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் ,இந்த நேரத்தில் உணவை குறித்து சிந்திக்க முடியாது. உயிர்களை காப்பாற்றவே உடனடியாக செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.