இலங்கையில் ஆதிவாசி கிராமத்தைச் சேர்ந்த 44 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆதிவாசி தலைவர் உருவரியாகே வன்னிலஎத்தோவின் மனைவி, குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட 44 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உருவரியாகே வன்னிலஎத்தோவின் மனைவி, மஹியங்கனை வைத்தியசாலையின் கொவிட் வாட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தம்மான ஆதிவாசி கிராமம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நடத்திய PCR பரிசோதனைகளிலேயே, 44 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.