இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை பல்வேறு அம்சங்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டு சுகாதார அமைச்சினால் புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

  • அத்தியாவசிய தேவைக்காக இன்று முதல் வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரமே வெளியே செல்ல முடியும்.
  • அனைத்து தசைப்பிடிப்பு நிலையங்கள் (மசாஜ் பார்லர்கள்), உடற்பயிற்சி நிலையங்கள், சிறுவர் பூங்காக்கள், உள்ளக விளையாட்டரங்குகள், நீச்சல் தடாகங்கள் என்பன மூடப்பட வேண்டும்.
  • இசை நிகழ்ச்சிகள் மற்றும் கடற்கரை களியாட்ட நிகழ்வுகள் என்பனவும் நடத்தப்படக்கூடாது.
  • அறநெறி பாடசாலைகள் மற்றும் மேலதிக வகுப்புகள் நடத்துவதனை நிறுத்த வேண்டும்.
  • வீடுகளில் எந்தவொரு ஒன்றுகூடல்களையும் நடத்த முடியாது.
  • வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் ஒன்றுகூடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.