இலங்கை போக்குவரத்து சபையின் சுமார் 285 ஊழியர்கள் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக வாகன ஒழுங்குறுத்துகை, பேருந்துப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் புகையிரதப் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்  திலும் அமுனுகம தெரிவித்தார்.

களுத்துறை சாரதி பயிற்சிப் பாடசாலையில் இலங்கையின் போக்குவரத்து சபை ஊழியர்களுக்கான சிகிச்சை மையம் திறக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார்.