கொவிட்-19 வைரஸ் தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்த குறைந்த வருமானம் பெறும் குடும்பங் களுக்கு 2000 ரூபா உதவித் தொகை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
எதிர்வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை முதல் உதவித்தொகை வழங்கப்படும் என நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்தார்.
அதன்படி, பிற கொடுப்பனவுகளைப் பெறாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் உதவித் தொகையைப் பெற தகுதியுடையவர்களாக இருப்பார்கள்.
பயனாளிகளின் பட்டியலைத் தொகுக்குமாறு மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ள தாகவும் நிதியமைச்சின் செயலாளர் தெரிவித் துள்ளார்.
5000 ரூபாநிவாரணம் கிடைக்குமா? அரசாங்க தரப்பில் இருந்து பதில்!
தற்போது நாடு உள்ள நிலையில் முடக்கம் அறிவிக்கப்பட்டாலும் 5000 ரூபா நிவாரணம் வழங்க முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
முடிந்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 2000 ரூபா நிவாரணம் வழங்கலாம் என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி என்ற அடிப்படையில் 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது மாத சம்பளத்தை கொவிட் ஒழிப்பு நிதியத்திற்கு வழங்க முடிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் கீழ்மட்டத்தில் உள்ள தங்களது 1400 உள்ளூராட்சி உறுப்பினர்களிடம் ஏதேனும் பெற முடிந்தால் அதனையும் சேகரித்து நிதியத்திற்கு வழங்க உள்ளதாக தயாசிறி கூறினார்.