அதிகபட்ச கட்டணத்தை மீறினால் முறைப்பாடிட விசேட இலக்கம்தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படுகின்ற பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளுக்கான அதிகபட்ச கட்டணத்தை வர்த்தமானி அறிவித்தல் மூலம் அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

அதன்படி , பி.சி.ஆர் பரிசோதனைக்கான அதிகபட்ச கட்டணம் 6,500 ரூபா மற்றும் அன்டிஜன் பரிசோதனைக்கான அதிகபட்ச கட்டணம் 2,000 ரூபாவாக விலைக்கட்டுப்பாடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் இக் கட்டணம், நேற்று மாலை முதல் நடைமுறையில் உள்ளதுடன், இந்த பரிசோதனைகளுக்கு இதற்கு மேலதிகமாக கட்டணம் அறவிடப்படால், 1917 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யுமாறு நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு தெரிவிக்கின்றது.