இலங்கையில் 103 வயதான மூதாட்டி ஒருவருக்கும் கொரோனா தொற்று நோய்க்கான தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா பரவலை தடுப்பதற்காக கொரோனா தடுப்பூசி ஏற்றும் வேலை திட்டம் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.கொரோனா தடுப்பூசி நிலையங்களுக்கு வரமுடியாத முதியவர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி ஏற்றப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் நேற்றைய தினம் 103 வயதான மூதாட்டி ஒருவருக்கும் வீட்டுக்கே சென்று சுகாதாரத் தரப்பினரால் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

பதுளை பிரதேசத்தில் உள்ள குறித்த 103 வயதான மூதாட்டியின் வீட்டுக்குச் சென்று சுகாதார அதிகாரிகள் தடுப்பூசியைச் செலுத்தியுள்ளனர்.