மானிப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 7 சிறுவர்கள் உட்பட 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவிலேயே இந்த விடயம் வெளிவந்தது.

மானிப்பாய் பிரதேச வைத்தியசாலையில் இருந்து 33 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில், 27 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

இதில், 8, 9, 14, 14 வயது சிறுவன்களும், 13, 16, 16 வயது சிறுமிகளுமாக ஏழு சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.