அவசியமற்ற அனைத்து பயணங்களையும், உடனடியாக நிறுத்துமாறு வேண்டுகோள்.அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களையும் கூட்டங்களையும் இடைநிறுத்துமாறு 

சுகாதார அதிகாரிகள் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறுகையில்,

நாட்டில் புதிய கொரோனா தொற்றாளர்கள்  அடையாளம் காணப்பட்டதை  தொடர்ந்து இந்த கோரிக்கை விடுக்கபட்டுள்ளது.


மினுவங்கொடவில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலையின் 150 தொழிலாளர்களில் அறுபத்தொன்பது பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.

இதனை  தொடர்ந்து, சுகாதார அதிகாரிகள், அத்தியாவசியமற்ற பயணங்களைக் குறைக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கூறுகையில், வெளியில் நடமாட தேவை உள்ளவர்கள்   சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட கொரோனாவழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும், அதாவது முகமூடி அணிவது, கைகளை கழுவுதல் போன்ற வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.