தேவை நாடும் மகளிர் WOMEN IN NEED ( WIN )

மேற்சொல்லப்பட்ட இந்த அமைப்பானது முதன்முதலாக 1987ம் ஆண்டு ஒரு சில பெண்களடங்கிய சிறு குழுவினரால் ஸ்தாபிக்கப்பட்டது.குடும்ப அல்லது இல்லத்து வன்முறைகளால் பாதிப்படைந்த,(Domestic Violence) தீர்வில்லாத பிரச்சினைகளால் சோர்வடைந்து, பாதிப்படைந்த பெண்களுக்கு, நிவாரணத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன், ஆரம்பத்தில் இந்த அமைப்பு குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மட்டும் சேவையிலீடுபட்டது. நாளடைவில் குடும்ப வன்முறை, பால் நிலை அடிப்படை வன்முறை, பல தரப்பட்ட பிரச்சினைகளாலும் பாதிப்படைந்த பெண்கள், சிறுவர்கள் அனைவருக்கும் தனது சேவைகளை விஸ்தரித்து சேவையாற்றுகிறது. 
தேவை நாடும் மகளிர் ‘வின்' பதிவு செய்யப்பட்ட ஒரு இலாபம் கருதாத அமைப்பாகும். இவ்வமைப்பின் கிளைகள் ( WIN CRISIS CENTRES ) நாடளாவிய ரீதியில் யாழ்ப்பாணம் ,மட்டக்களப்பு , மாத்தறை, பதுளை, அநுராதபுரம் ஆகிய இடங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. பல வகையான குடும்ப 
வன்முறைகளால் பாதிப்படைந்து, உதவி நாடி வருபவர்களுக்கு இவ்வமைப்பு உதவிக்கரம் நீட்டுகிறது. குடும்ப வன்முறைகளாலும் துஷ்பிரயோகங்களினாலும் பாதிப்படைந்தவர்களுக்கு, அவர்கள் தம் வாழ்வை மீண்டும் கட்டியெழுப்பவும், வழமைக்குத் திரும்புவதற்காக உளவியல் பாதிப்புகளிலிருந்து வெளிவர உளவளத்துணையாளர்களால் உளவளத்துணை (Counselling) வழங்கப்படுகிறது. தேவைப்பட்டால் சட்டத்தரணிமார்களால் சட்ட ரீதியான வழிகாட்டல்களும் (Legal Advice) முன்வைக்கப்பட்டு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும். 
அது மட்டுமன்றி குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு குடும்ப வன்முறைச் செயல் தடுப்புச் சட்டத்தின் பிரகாரம் பாதுகாப்பற்ற சூழலில் கணவன்மார்களால் அச்சத்துடன் வாழும் சந்தர்ப்பங்களின்போது நீதிமன்றம் சென்று அவர்களுக்கான பாதுகாப்புக் கட்டளைகளைப் (Protection Order) பெற்றுக்கொள்ளவும், நடவடிக்கை எடுக்கப்படும். உதவிநாடிகள் சம்பந்தமாக பராமரிப்பு வழக்கு சட்டத்தரணிமாரால் நீதிமன்றங்களில் தொடரப்படும் இதை விட சமூக சேவகர்களும் (Social workers) உதவி நாடிகளின் பிரச்சினைகளைக் தொடர்ந்து கண்காணித்து, அவர்களின் வளர்ச்சியில் அக்கறை எடுத்து ஒரு முன்னேற்றத்த்தை அதாவது குடும்பங்களில் மாற்றத்தை எற்படுத்திக் கொடுக்க அர்ப்பணிப்புடன் கடமையாற்றுகின்றனர். தவிர வன்முறைகளால் பாதிப்புற்று நிர்க்கதிக்குள்ளாகி வீடு திரும்ப அச்சுறுத்தல் இருப்பவர்களுக்கு, வழக்குத் தொடரும் வரை சுமார் இரண்டு வாரம் மட்டும், அவர்களுக்கு தற்காலிக புகலிட வசதி செய்து கொடுக்கப்படும்.
வின் அமைப்பினர் நாடளாவிய ரீதியில் பொது மக்கள் , சிவில் சமூகத்தினர், பல்கலைக் கழக , மாணவர்கள், அரச ஊழியர்கள் யாவருக்கும் குடும்ப வன்முறை( Domestic Violence) , பால்நிலை அடிப்படை வன்முறை,) சைபர் குற்றங்கள் Cyber Violence , பற்றியும் அவற்றைப் பற்றிய விளக்கங்கள் அவற்றை எவ்வாறு தவிர்பது 
என்பது குறித்தும் அவற்றுக்கான சட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து பல விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடாத்தி வருகிறது

உளவளத்துணை, சட்ட உதவிகள் யாவும் இலவசம் 

இதைவிட நாட்டின் பிரதான பொலிஸ் நிலையங்களாகிய கொழும்பு ஆமர் வீதி, பொலிஸ் மகளிர் சிறுவர் பிரிவு, மதவாச்சி, மட்டக்களப்பு, பதுளை, கைவேலி புதுக்குடியிருப்பு, வெலிகம ஆகிய பொலிஸ் நிலையங்களில் மகளிர் சிறுவர் பிரிவுகள் அமைக்கப்பட்டு உதவிநாடிகளுக்கு அவர்களின் தேவைக்கேற்ப உளவளத்துணை சட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. 
தவிர கொழும்பு தேசிய வைத்தியசாலை, மற்றும் பிரதான மகளிர் . சொய்சா வைத்தியசாலை, அநுராதபுரம் வைத்தியசாலைகளிலும் தேவை நாடும் மகளிர் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்விடங்களில் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு வைத்திய ரீதியான உதவிகள், அவசியமான சிகிச்சைகள் உளவளத்துணை, சட்ட உதவிகள், விசேடமாக பொலிஸ் முறைப்பாடுகளைச் செய்யும் வசதி ஒரே இடத்தில் இலகுவாக பெற்றுக்கொள்ள உதவி நாடிகளின் நலன் கருதி வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கை வாழ்வதற்கே .அது அனுபவிக்க வேண்டியதொன்று எனவே வாழ்வில் வன்முறைக்கும் துஷ்பிரயோகத்துக்கும் இடமளிக்கமுடியாது. மௌனத்தைக் கலையுங்கள் வாழ்வில் வெற்றியடையுங்கள் என வின் அறைகூவல் விடுக்கிறது 
அண்மைக் காலமாக குடும்ப வன்முறைகள் மட்டுமல்லாது சமூகவலைத் தளம், இணையத் தளங்கள், மின்னஞ்சல் போன்ற ஊடகங்கள் மூலமாக கணனிகள் மற்றும் இணையத்தின் ஊடாக செய்யப்படும் குற்றங்ககள் எனப் புதிய வடிவங்களில் சைபர் குற்றம் (CYBER VIOLENCE) தலைதுாக்கியுள்ளது. இளைய தலைமுறையினருக்குப் பல பாதிப்புகள், அவமானங்கள் இணையக் குற்றங்களால் ஏற்படுகின்றன. தற்போது டிஜிட்டல் ஊடகங்களின் பயன்பாட்டின் மூலமாக, பெண்கள் மற்றும் பெண்பிள்ளைகளை இலக்காகக்கொண்டு வெவ்வேறு வடிவங்களில் குற்றங்கள் இழைக்கப்படுகின்றன. பெண்களின் புகைப்படங்களை கணனிகளின் பயன்பாட்டுடன் தொகுத்து பொய்யான தகவல்களுடன் பதிவிட்டு உறவுநிலையில் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன மற்றும் வேறு இணையப்பக்கங்களில் பதிவு செய்யப்படுகின்றன. 
இவ்வாறான பல முறைப்பாடுகளால் குழப்பமடைந்து மனஉளைச்சலுடன் பல இளைய தலைமுறையினர் நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ள எமது அலுவலகம் நாடி வருகின்றனர். இவர்கள் யாவருக்கும் தேவைப்படும் வழிகாட்டல்களும் சட்ட ரீதியான நடவடிக்கைகளும் உளவளத்துணையாளர்களால் உதவிநாடிகளுக்கு வழங்கப்படுவதுடன் மேலதிக குறித்துரைக்காக (ஆலோசனைக்காக) நடவடிக்கை மேற்கொள்ள பொலிசாருடன் தொடர்பினை ஏற்படுத்துகின்றனா. 
சகல பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உதவிநாடிக்கு இத் தொல்லையிலிருந்து விடுபட்டு பாதுகாப்பாக இருக்க தற்காப்புக்கான வழிகாட்டல்களும் கொடுக்கப்படுகின்றன. எமது சேவைகள் யாவும் இரகசியத் தன்மையோடு பேணப்படும். மிக அவசரமான சூழ்நிலைகளில் வழிகாட்டலைப்பெற தேவைநாடும் மகளிர் அமைப்பின் 24 மணித்தியால அவசர தொலைபேசி (HOT LINE - 0114718585 ) இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம். 

பெண்களுக்கெதிரான வன்முறை ஒரு குற்றமாகும் 
தொலைநோக்கு : (VISION) பாலியல் மற்றும் பால்நிலை அடிப்படை வன்முறைகளற்ற பாதுகாக்காப்பான ஒரு சமுதாயம். 
பணி நோக்கு : ( Mission ) மௌனத்தைக் கலைத்து வன்முறைக்கு எதிராக வாழ்வில் வெற்றிடைய பெண்களை ஊக்குவித்தல் பால்நிலை அடிப்படை வன்முறைகளால் பாதிப்படைந்த பெண்கள், பெண்பிள்ளைகளுக்கு முழுமையான சேவையை வழங்குதல். மனவடுவினால் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு அவற்றைச் சமாளிக்க தைரியப்படுத்தி வலுவூட்டல் அளித்தல்
தேவை நாடும் மகளிர் அமைப்பு சமூகத்தில் தற்சமயம் அதிகமாக பெண்களுக்கு எதிராக இடம்பெறும் சைபர் குற்றங்கள் சம்பந்தமாக ஒரு ஆராய்ச்சி அறிக்கையையும் (The Research Report on Cyber Violence against women and Girl child ) அத்துடன் பொலிசாருக்கு அது சம்பந்தமாக சைபர் குற்றங்கள் பற்றிய முறைப்பாடுகளை எவ்வாறு கையாள வேண்டும் என்ற வழிகாட்டல்கள் அடங்கிய துணைப்புத்தகம் (GUIDE LINES) ஒன்றையும் தயாரித்து வழங்கவுள்ளது. உங்கள் கையடக்க தொலைபேசிகளில் 2SIX4 என்கின்ற எமது appsஐ தரவிறக்கம் செய்து தேவையான விபரங்களைப் பெற்றுக்கொள்ளமுடியும் 
இது உங்களுக்கும் உங்கள் அருகில் இருப்பவர்களுக்கும் உதவியளிக்கும் 

எம்மைத் தொடர்புகொள்ள 
தேவை நாடும் மகளிர் WOMEN IN NEED 
ஸ்ரீ பாஸ்கரன் வீதி 
7ம் கட்டையடி 
கே கே எஸ் வீதி 
மல்லாகம் 
தொலைபேசி இலக்கம் 0212229671

தலைமைக் காரியாலயம் 
தேவை நாடும் மகளிர் WOMEN IN NEED 
ரிக்கள் றோட், பொரளை, 
கொழும்பு 8. 
தொலை பேசி இலக்கம் : 011- 2671411, 011-2671401 
(திங்கள் - வெள்ளி வரை மு.ப 8.30 பி.ப 4.30 வரை) அவசர தொலைபேசி இலக்கம் (Hot line No ) 011- 4718585 தொலை நகல்: FAX : 011-2671401 
இணையத்தளம் :WEBSITE : www. winsl.net 
மின்னஞ்சல்: Email : womeninneed87@gmail.com