தூங்கிக்கொண்டிருந்த மனைவியின் தலையில் கல்லைப் போட்டு கொன்றுவிட்டு, கணவனும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
40 வயதான முத்துராஜன் என்பவர் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் ஜவஹர் நகர் பகுதியில் மனைவி மணிமேகலை மற்றும் மகன், மருமகள் பேரக்குழந்தைகளோடு வாழ்ந்து வந்துள்ளார். கட்டிட தொழிலில் ஈடுபடும் முத்துராஜனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்படுவது வழக்கம்.


ஜூலை மாதம் கடந்த 1ஆம் தேதியும் கணவன் மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த முத்துராஜன் அன்றிரவு அனைவரும் தூங்கியபின் தன் வீட்டு வெளியே இருக்கும் கல்லை கொண்டு வந்து தன் மனைவி மணிமேகலையின் தலையில் தூக்கிப்போட்டுள்ளார். அதன் பின் எவ்வித கவலையும் இன்றி தான் வாங்கி வந்த விஷத்தை குடித்துவிட்டு படுத்துக்கொண்டுள்ளார். மேலும் படுகாயமடைந்த மணிமேகலை சம்பவ இடத்தில் துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் நடுஇரவில் மருமகளான பவித்ரா, தனது குழந்தை அழும் சத்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது, அருகில் அவரது மாமியார் மணிமேகலை ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். அதிர்ச்சியடைந்த பவித்ரா தன் மாமனாரை எழுப்பி, மாமியார் கொலை செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். அப்போது மயக்க நிலையில் நான் தான் மணிமேகலையின்  தலையில் கல்லைப்போட்டு கொன்றதாக கூறியுள்ளார். என்ன செய்வதென்று அறியாமல் பவித்ரா சத்தம்போட்டு   அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார். உடனடியாக ஆம்புலன்ஸ்ஸை அழைத்து முத்துராஜை மருத்துவமனைக்கு கூட்டிச்செல்லும் முன் உயிரிழந்துள்ளார்.

தகவலறிந்த துடியலூர் போலீசார், முத்துராஜன் மற்றும் மணிமேகலையின் உடலை மீட்டு பிரேத பிரசோதனைக்காக கோவை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கணவன் மனைவி கொலை மற்றும் தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.