கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 519 தொற்றாளர்களில் 440 பேர் அங்கு புனர்வாழ்வளிக்கப்பட்டவர் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் 47 பேர் அங்கு ஊழியர்களாக செயற்பட்டவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, 30 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களாகும்.
கொரோனா பரவலையடுத்து அனுராதபுரம் – ராஜாங்கன யாய 1,3 மற்றும் 5 ஆகிய பிரதேசங்களுக்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
கந்தகாடு கொரோனா கொத்துடன் தொடர்புடையவர்களை அடையாளம் காணும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, நேற்றையதினம் கண்டுபிடிக்கப்பட்ட அனைவரும் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்தவர்கள் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அண்மையில் கொரோனா தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட பிரதேசத்தை மூடவில்லை என்றால் இரண்டாவது கொரோனா அலையை தடுக்க முடியாதென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.