கொரோனா நோயை குணமாக்க... தனியாக சித்த மருத்துவ சிகிச்சை வழங்கும் தனி சிறப்பு மையம் இன்று தனது பணியை துவக்கி உள்ளது.....


சென்னை..சாலிகிராமம் ஜவஹர் பொறியியல் கல்லூரியில் தனித்த சித்த மருத்துவ சிகிச்சை 400 படுக்கைகளுடன் துவக்கப்பட்டுள்ளது..
சித்த மருத்துவத்தை பயன்படுத்தி குணம் பெற விரும்பும் கோரோனா பாசிட்டிவ் நோயாளர்கள் சென்னை மண்டல அலுவலர் மூலமாக பாதுகாப்பான முறையில் இங்கு வந்து சேரலாம்..
முழுவதும் இலவச சேவை...அரசு நேரடிப் பார்வையில் National Institute of Siddha வின் இயக்குனர் மீனா குமாரி அவர்கள் மற்றும் மருத்துவர்கள்,மூத்த மருத்துவர்.பேராசிரியர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்கள், மரு.வீரபாபு அவர்களின் கண்காணிப்பில் சித்த மருத்துவ சிகிச்சை சித்த மருத்துவர்களால் வழங்கப்படுகிறது..
காலையில் கபசுரக்குடிநீர் மற்றும் மூலிகைத் தேநீர்..வழங்கப்படுகிறது.
காலை 8 மணி முதல் 9 மணி வரையும் மாலை 5 முதல் 6 மணி வரை வெயில் சிகிச்சை தரப்படும்...இதற்காக கல்லூரியின் மரங்கள் நிறைந்த இயற்கையான வெளிப்பரப்பில் நோயாளர்கள் சூரிய ஒளி பெற்று வைட்டமின் D சக்திபெற முடியும்..
மூச்சுப் பயிற்சி..யோகா பயிற்சி வழங்கப்படுகிறது.
உணவே மருந்து..என்ற அடிப்படையில் சத்தான பாரம்பரிய உணவுகள்..சிறுதானிய உணவுகள்..மூலிகை சூப்கள்..வழங்கப்பட உள்ளன...
ஒவ்வொரு உணவின்போதும் முடக்கற்றான்.. தூதுவளை...முசுமுசுக்கை ...மிளகு இரசம் வழங்கப்படும்...
இன்று மதியம் வரை சுய விருப்பத்தின்பேரில் 10 கோரோனா நோயாளர் இங்கு வந்துள்ளனர்..தொடர்ந்து வருகை உள்ளது......